வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேற்றின்படி மாணவன் ஒருவன் இருபது புள்ளிகள் வித்தியாசத்தில் சித்தி பெற்றுள்ளான்.
இச் சம்பவம் காரைதீவில் இடம் பெற்றுள்ளது.
காரைதீவு இகிமி.ஆண்கள் பாடசாலையில் பயின்ற செல்வன் சுரேஸ்குமார் ரதுசாயிதன் என்ற மாணவனே இவ்விதம் மீள் பரிசீலனையில் இருபது புள்ளிகள் கூடுதலாக பெற்று சித்தி பெற்றுள்ளான்.
கடந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இம் மாணவன் 145 புள்ளிகளை பெற்றிருந்தான். அம்பாறை மாவட்ட வெட்டுப் புள்ளி 147. எனவே இம் மாணவன் சித்தி பெறவில்லை எனக் கருதி பாராட்டு விழாக்களில் உள்வாங்கப்படவில்லை.
எனினும் இந்தப்புள்ளியில் திருப்தி அடையாத இவரது பெற்றோர் மீள்பரிசீலனைக்காக பாடசாலையில் விண்ணப்பித்தனர்.
மீள்பரிசீலனை பெறுபேறுகள் நேற்று கிடைத்தது. அதன்படி இம் மாணவன் பெற்ற புள்ளிகள் 165ஆகும்.
அதாவது இருபது(20) புள்ளிகள் கூடுதலாக கிடைத்தது.
இது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவனின் தந்தையான ச.சுரேஸ்குமார்( விவசாய போதனாசிரியர்) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்...
கடந்த 2021 2022 புலமைப்பரிசில் பரிட்சையில் தோற்றிய எனது மகனின் பெறுபேறு வெளியான போது கட்டவுட் புள்ளி மாவட்ட ரீதியில் 147 எனக் குறிப்பிட்டு இருந்தும் எனது மகனின் பெறுபேறு 145 என அறிவிக்கப்பட்டது .
அன்று சந்தேகத்தில் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பித்திருந்தேன் .இன்று அதன் பெறுபேறு 165 என பரிட்சை திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது . கிட்டத்தட்ட 20 புள்ளிகள் வித்தியாசம்
இது இனிப்பான செய்தியாக காணப்பட்டாலும் தவறு எங்கு நடக்கின்றது என்பது தெட்டத் தெளிவாக புலனாகிறது .
எனவே பிஞ்சு உள்ளங்களை அவர்களது திறமையினை மழுங்கடிக்கும் பரிட்சை வினாத்தாள் திருத்தும் பரிசோதகர்கள் கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
எப்படி இருந்தாலும் என் மகன் ஆண்டவனின் கிருபையால் சித்திரம் கெட்டிக்காரன்.அதற்காக
ஆண்டவனுக்கும் கற்பித்த ஆசான் களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.
இப்படி ஒரு துரதிஷ்ட நிலைமை எந்த மாணவனுக்கும் அல்லது பெற்றோருக்கும் ஏற்படக்கூடாது என்று விரும்புகின்றேன் .
பொதுவாக மீள்பரிசீலனையில் ஓர் இரண்டு புள்ளிகள் குறையலாம். கூடலாம்.ஆனால் இவ்வாறு 20 புள்ளிகள் கூடி வருவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கோ ஒரு இடத்தில் பிழை நிச்சயமாக நடந்திருக்கின்றது என்று அர்த்தம் .எனவே பரீட்சை திணைக்களம் இது விடயத்தில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் .
அதிர்ச்சி வைத்தியம் பார்க்க கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.



Post a Comment
Post a Comment