சாய்ந்தமருதில் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்கான அறிவூட்டல்.
நூருள் ஹுதா உமர்
உலக சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்கான அறிவூட்டல் கருத்தரங்கு பிரதேச செயலாளர் எம். எம். ஆசிக் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக பிரதேச செயலக சமுர்த்தி முகமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யு. ஜுனைதா அவர்களின் தலைமையில், சமூக அபிவிருத்திக்கு பொறுப்பான உத்தியோகத்தர் யு.எல். ஜஃபர் அவர்களின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (5) நடைபெற்றதது.
இந்நிகழ்வில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.றிபாயா, உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வின் வளவாளராக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.ஜி.வி.எம். றஸாட் போதைப்பொருள் பாவனையினால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கள், அதனால் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக பெற்றோர்களுக்கு விளக்கமளித்தார்.


Post a Comment
Post a Comment