வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த வர்கள் கைது



 


FAROOK SIHAN


ஐஸ் போதைப்பொருளை  விநியோகித்த இரு    சந்தேக நபர்கள் தொடர்பில்    கல்முனை விசேட அதிரடிப்படையினர்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை(13)   இரவு   மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  வாழைச்சேனை நகரப்பகுதியில்    வைத்து  இரு சந்தேக நபர்களும்    விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகினர்.

இவ்வாறு கைதான நபர்கள் இருவரும் ஓட்டமாவடி  பகுதியை  சேர்ந்த 51 மற்றும் 36  வயது  மதிக்கத்தக்கவர்கள்   என்பதுடன் சந்தேக நபர்கள்    வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள்கள் முறையே 5 கிராம் 140 மில்லிகிராம் மற்றும் 9 கிராம் 340 மில்லி கிராம் உட்பட மோட்டார் சைக்கிள் ஒன்றும்   விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இச்சோதனை நடவடிக்கையின் போது   விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய  மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்   டி.சி வேவிடவிதான  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம்   பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில்     உப பொலிஸ் பரிசோதகர்   எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க   பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (13443) உள்ளிட்ட  பொலிஸ் கன்டபிள்களான பியுமஹ (94143) ஜயவர்த்தன  (94155) நிமேஸ்  (90699)  அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபர்களை  கைது செய்தனர்.
   
 பின்னர்  கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட  சான்று பொருட்களுடன் வாழைச்சேனை  பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.