Update - சிறைச்சாலை அமைதியின்மை காரணமாக 5 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு



(இச் செய்தி புதுப்பிக்க்ப்படுகின்றது)


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை மீண்டும் ஏற்பட்ட அமைதியின்மையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதுடன், அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார்.


இன்று காலை ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சில துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து சிறைச்சாலையில் பதற்றம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


தொடர்ந்து உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட சடலங்களில் நான்கு சிறைச்சாலை அதிகாரிகளுடையவை என்றும், மற்ற நான்கு பேர் கைதிகளுடையவை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளசற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.


அவர்களில் மூவர் சிறைச்சாலை அதிகாரிகள் என்றும், மற்ற இருவரும் கைதிகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


நீர்கொழும்பு சிறைச்சாலையில் சற்று முன்னர் மீண்டும் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கமைய, 35 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்புப் படையினர் ஆவர். காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கடுமையாகக் காயமடைந்தவர்களைக் கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.