வி.சுகிர்தகுமார்
5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை அடைவு மட்டங்களை அதிகரிப்பதற்கான சமூக பணிகளில் பல்வேறு சமூக அமைப்புக்கள் விளையாட்டுக்கழகங்கள் என பல்தரப்பினரும் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இப்பணியில் அக்கரைப்பற்று மருது விளையாட்டுக்கழகமும் கைகோர்த்து கல்வி அபிவிருத்தி பணியினை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக இவ்வருடம் புலமை பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயம் மற்றும் ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை மற்றும் விளக்கமளிக்கும் பயிற்சி செயலமர்வொன்றினையும் இன்று நடாத்தியது.
அக்கரைப்பற்று மருது விளையாட்டுக்கழகத்தின் நிதியுதவி மற்றும் கழக உறுப்பினர்களின் பங்களிப்போடு இடம்பெற்ற முன்னோடி பரீட்சை மற்றும் விளக்கமளிக்கும் பயிற்சி செயலமர்வில் அக்கரைப்பற்று பிரதேசத்தின் பிரபல்ய ஆசிரியர் எஸ்.பிரபாகரன் கலந்து கொண்டு பரீட்சையினை நடாத்தியதுடன் விசேட பயிற்சி செயலமர்வினையும் நடாத்தி வைத்தார்.
இதில் அதிகளவான மாணவர்கள் கலந்து கொண்டு பரீட்சையில் தோற்றியதுடன் இதன் பின்னராக இடம்பெற்ற விளக்கமளிக்கும் செயலமர்விலும் கலந்து கொண்டனர்.
இதேநேரம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் புலமை பரிசில் மாணவர்களின் வழிகாட்டியாகவும் நல்லாசானாகவும் திகழ்ந்துவரும் ஆசிரியர் எஸ்.பிரபாகரன் மருது விளையாட்டுக்கழகத்தினரால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
2022 ஆம் ஆண்டிற்கான புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment