ஆரையம்பதி பாலமுனையில் BOI அங்கீகாரம் பெற்ற ULTRA LANKA நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள அலுமினியம் தொழிற்சாலையினை இன்று முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் பார்வையிட்டதோடு இதன் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பாக அதன் தவிசாளர் அல்ஹாஜ் உனைஸ் அவர்களுடன் கலந்துரையாடினார்.
கிழக்கு மாகணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அலுமினியம் தொழிற்சாலை இதுவாகும். உள்நாட்டு மூலப் பொருட்களை கொண்டு உற்பத்தி நடவடிக்கைகள் இடம் பெறுவதாக அதன் தவிசாளர் அல்ஹாஹ் உனைஸ் குறிப்பிட்டார் .
இந்த தொழிற்சாலை மூலமாக பல்வேறு வேலைவாய்ப்புக்களை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டதோடு எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு இதன் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.



Post a Comment
Post a Comment