(வி.சுகிர்தகுமார்)
நாடும் நாட்டு மக்களும் நலமுடன் வாழ வேண்டும் எனும் பிரார்த்தனைகளில்; அம்பாரை மாவட்டத்தில் வாழும் .தமிழ் மக்களும் ஈடுபட்டதுடன் புத்தாண்டை வரவேற்கும் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் புதுவருடத்தை வரவேற்றனர்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாடு சுபீட்சமடைய வேண்டும் எனும் வேண்டுதலுடன் புத்தாண்டு வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
அதிகமான தமிழ் மக்கள் இன்று அதிகாலை நீராடி புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன்; பாரம்பரிய நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் அக்கரைப்பற்று வீரம்மாகாளியம்மன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் தாமரைக்குளம் சீரடி சாயிபாபா ஆலயங்களிலும் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் பக்தர்கள் கலந்து கொண்டு இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.
இறைவழிபாட்டில் ஈடுபட்ட மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டதுடன் பெரியோர்களின் ஆசியினையும் பெற்றுக்கொண்டனர்.
இதன் பின்னர் ஆலயம் சென்ற அடியவர்கள் அனைவருக்கும் ஆலய பிரதமகுருமார்களின் ஆசிர்வாதம் மற்றும் புதுவருட கைவிசேடமும் வழங்கி வைக்கப்பட்டது.
இதேநேரம் வீதிகள் தோறும் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் பொங்கல் பூஜை வழிபாடுகளையும் மக்கள் மேற்கொண்டனர்.

Post a Comment
Post a Comment