ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைக்க லக்னௌ அணியும் முதல் வெற்றியை ருசித்தாக வேண்டிய கட்டாயத்தில் ஐதராபாத் அணியும் இருந்ததால் போராட்டம் முதல் இன்னிங்ஸிலேயே கடுமையாக இருந்தது.
ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். மைதானம் சவாலானதாக ஒருபுறம் இருந்ததோடு, லக்னௌ அணியின் சாமர்த்தியமான பந்துவீச்ச்ல் மிகவும் திணறிய ஹைதராபாத் 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை எடுத்தது.
தொடக்க பேட்ஸ்மேன்களாக மயங்க் அகர்வால், அம்மோப்ரீத் சிங் களமிறங்கினார்கள். கைல் மேயர்ஸ் முதல் ஓவரை வீச வந்தார்.
அம்மோல்ப்ரீத் சிங் பவர் பிளேவின் தொடக்கத்திலேயே தனது அதிரடியைக் காட்டத் தொடங்கினார். ஹைதராபாத் அணிக்கான தொடக்கம் நன்றாகவே இருந்தது. ஆனால், அதேநேரத்தில் க்ருனால் பாண்ட்யாவும் பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை அசர வைத்தார்.
இரண்டாவது ஓவரில் ஜெய்தேவ் உனாத்கத் பந்துவீச்சில் மிட் ஆஃபில் அதிரடியாக சிக்சர் அடித்து ஹைதராபாத் அணிக்கான சிக்சர் கணக்கைத் தொடங்கி வைத்தார் அம்மோல்ப்ரீத். மூன்றாவது ஓவரில் மயங்க் க்ருனால் பாண்ட்யா வீசிய பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட்டார். ஆனால், அதற்கு அடுத்த பந்திலேயே மார்கஸ் ஸ்டாய்னிஸ் கைக்கு கேட்ச் கொடுத்து மயங்க் வெளியேறினார்.


Post a Comment
Post a Comment