(வி.சுகிர்தகுமார்)
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னப்பனங்காடு பிரதேச வீடொன்றில் தாலி மாலை உள்ளிட்ட சுமார் 14 இலட்சம் மதிப்பிடத்தக்க 9 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று (26) அதிகாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் வீட்டின் உரிமையாளரால் அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டின் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் பூர்த்தி செய்யப்படாத மேல் தளத்தின் கதவு வழியாக உள் நுழைந்த இரு கள்வர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியினையும் மாலையினையும் வெட்டி எடுத்துச் சென்றுள்ளதாக வீட்டு உரிiமாளரால் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தாலியும் மாலையும் வெட்டப்படுவதை உணர்ந்த பெண் நித்திரையில் இருந்த மீண்டு கள்வனை தடுக்க முற்பட்டபோது பெண்ணை கீழே தள்ளிவிட்டு கள்வன் தப்பித்துச் சென்றதாகவும் அவரால் கூறப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் வாக்குமூலத்தை பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அன்மைக்காலமாக கொள்ளை போதைப்பொருள் கைது என்பன அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

.jpg)

Post a Comment
Post a Comment