பழமரக்கன்றுகள் நடுகை நிகழ்வு




 ( வி.ரி. சகாதேவராஜா)


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் மரநடுகை நிகழ்வுகளில் ஒரு நிகழ்வாக  பழமரத் தோட்டம் அமைக்கும் நிகழ்வானது  நேற்று முன்தினம் (2023.08.22) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் குருக்கள்மடம் அசீசி சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றது. 

 பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு (கிராம உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - திட்டமிடல், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள்) வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக பிரதேச செயலக பிரிவில் பல மரநடுகை திட்டங்கள் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் பழமரத் தோட்டம் அமைக்கும் நிகழ்வானது அசீசி சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது 80 பயன்தரு பழ மரக்கன்றுகள் (மா, தோடை, மாதுளை, கொய்யா) நடுகை செய்யப்பட்டது. 

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. சத்யகெளரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் த. நிர்மலராஜ், அருட்சகோதரர் ஜெகன், அருட்தந்தை அம்றோஸ், நன்னிலம் நிறுவனத்தின் உறுப்பினர் சிந்துஷா, கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் (திட்டமிடல்) மற்றும் சிறுவர் இல்ல மாணவர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வினை பிரதேச செயலக உத்தியோகத்தர்களான  ப. ராஜதிலகன் (கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) மற்றும் வ. பிரசாந்த் ( வெளிக்கள இணைப்பாளர்- விதாதா) ஆகியோர் இணைந்து செயற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.