புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - குறைந்தது 18 பேர் உயிரிழப்பு



 


டெல்லியில் உள்ள புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிக் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.


புது டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் ரிது சக்சேனா, பிபிசி ஹிந்தியிடம் இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார்.


சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததைத் தொடர்ந்து, இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.


''அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும்'' தனது அனுதாபங்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.