வட்டமடு காணிகளில், ஒரு தொகுதியில் விவசாயச் செய்கையில் ஈடுபட அனுமதி



ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வட்டமடு காணிகளில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக,கால் நடை வளர்ப்புக்கார்கள், விவசாயிகள் ஆகியோருக்கு இடையில் இளுபறி நிலை காணப்பட்டிருந்தது.

குறித்த காணிகளின் சுமார் 300 ஏக்கர் காணிகள் முதற்கட்டமாக விவசாய நடவடிக்கைகளுக்கு அனுமதி அரச அதிபர் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கென அண்மைக் காலத்தில் அயராது பாடுபட்டு உழைத்த தேசிய மக்கள் சக்தியினருக்கு விவசாயிகள் நன்றி நவிலுகின்றனர்.