(சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டத்திலும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை (17) ஆரம்பமானதுடன் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததை காணமுடிந்தது.
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட மூன்று கல்வி கோட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 8 பரீட்சை நிலையங்களில் பரீட்சை ஆரம்பித்ததுடன் 846 பாடசாலை மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதாக திருக்கோவில் வலய கல்வி அலுவலக பிரதிக்கல்விப்பணிப்பளார் க.கமலமோகனதாசன் தெரிவித்தார்.
மாணவர்கள கடந்த வருடத்தில்; இப்பரீட்சைக்கு தோற்றவேண்டி இருந்தபோதிலும் பல்வேறு காரணங்களினால் பரீட்சை பிற்போடப்பட்டு இன்று பரீட்சைகள் ஆரம்பமாகியது
மாணவர்கள் இறைவழிபாட்டின் பின்னர் ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றுவதற்கு அக்கரைப்பற்று இராமகிருஸ்ணா தேசிய பாடசாலையிலும் அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்தைதையும் அவதானிக்க முடிந்தது.
பெற்றோர்கள் பலர் பாடசாலைக்கு முன்பாக கூடியிருந்ததுடன் மாணவர்களுக்கு ஆசிவழங்கி வழி அனுப்பி வைத்தனர்.
வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.உதயகுமார் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் பரீட்சை நிலையங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment