எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசை, மின்சாரம் துண்டிப்பு, தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு,




 வி.சுகிர்தகுமார்       

 அம்பாரை மாவட்டத்தில் வெள்ள அனர்த்த நிலையிலிருந்து மக்கள் மீண்டு வருகின்றபோதிலும் மின்சாரம் துண்டிப்பு, தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு, எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு முதல் பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக முண்டியடித்துக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்து காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இருப்பினும் எரிபொருள் நிலையங்களில் ஜெனரேட்டர் உதவியுடன் எரி;பொருளை வழங்கும் செயற்பாடுகளை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் ஈடுபட்டதையும் காண முடிந்தது.
இதேநேரம் மின்சாரத்துண்டிப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டமையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளம் வடிந்து வருகின்றபோதும்; ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையானது விவசாயிகளிடையே பெரும் கவலையினை தோற்றுவித்துள்ளது.
ஆயினும் மலையகம் மற்றும் வடமாகாணம் தென்மாகாணம் போன்ற பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தினால் பெரும் இழப்பை சந்தித்துள்ள அம்மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அம்பாரை மாவட்ட மக்கள் தயாராகி வருவதையும் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்திவேண்டி அஞ்சலி செலுத்துவதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெழ இறைவனிடத்தில் வேண்டுவதையும் குறிப்பிட முடிகின்றது.