நூருல் ஹுதா உமர்
நாவிதன்வெளி சாளம்பைக்கேணியில் அமைந்துள்ள தாருல் ஹிக்மா கலாபீடத்தில் சுதந்திர தின நிகழ்வும், மாணவ தலைவர்களுக்கு சின்னம் வழங்கும் விழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு, கலாபீடத்தின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.றிபாஸ் (ஹாமி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கலாபீடத்தின் தலைவரும், பணிப்பாளருமான அஷ்ஷெய்க் ஏ.சி.தஸ்தீக் (மதனி) அவர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கலாபீடத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம். உவைஸ் (ஸலபி) அவர்கள் “நாட்டை நேசித்தலும் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஒன்றை நிகழ்த்தினார். மேலும், பிரதி அதிபர் மற்றும் கல்லூரியின் தலைவர் ஆகியோரும் சுதந்திரத்தின் பெறுமதி, இளைஞர் தலைமையின் பொறுப்பு குறித்து உரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து, கல்லூரியில் கல்வி பயிலும் தலைமைத்துவப் பொறுப்புகளை வகிக்கும் மாணவர்களுக்கு, அதிதிகள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களினால் கல்லூரியின் மாணவ தலைவர் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், கலாபீடத்தின் பணிப்பாளர் சபையினர், நிர்வாக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


Post a Comment
Post a Comment