பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் போகாமலித்த பகுதியில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் எவருக்கும் உயிர் சேதமோ அல்லது கடுமையான காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான வாகனத்தை மீண்டும் நிலைநிறுத்தும் பணிகளில் மின்சார சபை ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
ராமு தனராஜா


Post a Comment
Post a Comment