வாச்சிக்குடாவில், வழிபாட்டுக்கிரியைகள்



 


ஆலையடிவேம்பு நிருபர்

வி.சுகிர்தகுமார்          

 அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்திஸ்ரீன் P ராம நவமி வழிபாட்டுக்கிரியைகள் இன்று (27) நடைபெற்ற வருசாபிஷேக தின அஸ்டோத்திர(108) கலச சங்காபிஷேக கிரியைகளுடன் நிறைவுற்றது.
 ஸ்ரீP ராம நவமி கடந்த 18ஆம் திகதி ஸ்நாபினாபிசேகத்துடன் ஆரம்பமாகி  அன்று மாலை இடம்பெற்ற குருபூஜை, விக்னேஸ்வரர் பூஜை, ஆஞ்சநேயர் பூஜை, ஸ்ரீராம பட்டாபிசேக பூஜை, இராமாயணம் கதை படித்தல், என்பன நடைபெற்று தொடர்ந்து நாளாந்தம் நடைபெற்ற பூஜைகளுடனும், இன்று 27ஆம் திகதி காலைமுதல் நடைபெற்ற அஸ்டோத்திர(108) கலச சங்காபிசேக கிரியைகளுடன் நிறைவுற்றது.
 விசேட யாகபூஜைகள் ஆரம்பமாவதுடன் யாகபூஜையில் அடியவர்களினால் ஆகுதிகள் சொரியப்படும். பின்னர் பிரதான கும்ப வெளிவீதி உலாவும்  இடம்பெற்றது.
வெளிவீதி உலாவாக எடுத்துவரப்படும் பிரதான கும்பம் ஆஞ்சநேய சுவாமி மீது சொரியப்பட்டு 108 ஆஞ்சநேய மந்திர உச்சாடணமும் அலங்கார பூஜையும் நடைபெற்றதன் பின்னர் பூஜைகள் நிறைவுற்றது.
கிரியைகள் யாவற்றையும் கிரியாகலாநிதி சிவஸ்ரீ  புண்ணியகிருஸ்ண குமாரக்குருக்கள் மற்றும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ த.குகனேஸ்வர சர்மா ஆகியோர் நடாத்தி வைத்தனர்.
இலங்கையில் பல ஆஞ்சநேயர் ஆலயங்கள் இருந்தாலும் ஜந்து முகங்களுடன் ஐந்தடி உயரத்தில் திருக்காட்சி தரும் ஸ்ரீPராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயரின் கற்சிலை அமைந்துள்ள ஆலயம் இது ஒன்றே என்பதே இங்கு சிறப்பு. உலகிலே காணப்படும் பல்வேறு மூலிகை மரங்களும் குறிப்பாக 27 நட்சத்திரங்களுக்கும் உரித்தான அற்புதமரங்களும் இயற்கையாக உருவாகி வானுயர்ந்து சோலைபோல் வளர்ந்து நிற்கும் மருத மரமும் ஆலயத்திற்கான இன்னுமொரு தனிச்சிறப்பு.
 இவ்வாறு சிறப்புடன் குருதேவர் காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளினதும் ராம்ஜி சுவாமிகளினதும் பரிபூரண ஆசீர்வாதத்துடன் அமைக்கப்பட்ட இவ் ஆலயத்தில் வருடந்தோறும் இச்சிறப்பு வழிபாடு இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும்.