போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) ஆணையாளர் நாயகம், கைது



 போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) ஆணையாளர் நாயகம் கமால் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 


வாகனப் பதிவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் முறையற்ற வாகனப் பதிவு தொடர்பான விசாரணைகள் காரணமாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த சில தினங்களுக்கு முன்னர், இதே திணைக்களத்தைச் சேர்ந்த முன்னாள் உதவி ஆணையாளர் உட்பட மூவர், சுங்கத் தீர்வை செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மோசடியான முறையில் பதிவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.


கைது செய்யப்பட்டுள்ள ஆணையாளர் நாயகத்திடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் பரந்த அளவிலான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்தக் கைது நடவடிக்கை பார்க்கப்படுகிறது.