மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு விளக்கமறியல்



 


வாகனப் பதிவின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காக, நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இன்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, அவரைக் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.