நிந்தவூர் பிரதேச மீனவர்களின் தேவைகள் குறித்து ஆராய்வு



  


நூருல் ஹுதா உமர்


நிந்தவூர் பிரதேசத்தில் வாழும் மீனவர்கள், மீன் வியாபாரிகள் மற்றும் மீனவ சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை நேரில் ஆய்வு செய்யும் நோக்கில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் இன்று (29) கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த விஜயம் நிந்தவூர் கடற்கரைப் பகுதிகளில் இடம்பெற்றதுடன், அங்குள்ள கரைவலை மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், கடல் அரிப்பினால் ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் மற்றும் மீன் வியாபாரிகள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேரடி கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான எச். அம்ஜத் அலி மற்றும் மெளலவி கே.எம். ஜலீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.