ஆலையடிவேம்பு நிருபர்
அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்ல ஸ்தாபகர் தின நிகழ்வுகளும் இந்தியாவில் இருந்து வருகைதந்த வளவாளர்களையும் வள்ளல்களையும் வரவேற்கும் நிகழ்வும் அறநெறி ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும் (19) இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் திருச்சி உதயா உணவுகள் பதப்படுத்தல் உற்பத்தி பயிற்சியாளர் எஸ்.பொன் செல்வி சரவணன் தொழில் ஆலோசகர் மற்றும் எழுத்தாளர் எம்.ஞானசேகரன் சமூக சேவகர் எம்.பி.பழனிச்சாமி திருமதி கண்ணம்மாள் சண்முகம் சட்டத்தரணி மற்றும் ரோட்டறி கழகத்தின் செயலாளர் எப்.டபிளியு.பிறங்கிளின் விஜயகுமார் பணியகம் சார்ந்த தரச்சான்று உத்தியோகத்தர் சதீஸ்பாபு உள்ளிட்ட பிரதேச சபை தவிசாளர் தர்மதாச அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜி என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விபுலானந்தா இல்லத்தின் ஸ்தாபகராக இருந்து வழிநடத்திவரும் த.கயிலாயபிள்ளை அவர்களை முன்னிறுத்தி ஸ்தாபகர் தினமாக மார்ச் மாதம் 17ஆம் திகதியாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் பின்னராக இந்தியாவில் இருந்து வருகை தந்த வளவாளர்களும்; வள்ளல்களும் இணைந்து இல்ல வளர்ச்சிக்காக உதவி செய்வதாக உறுதி அளித்ததோடு பிரதேச உற்பத்தியாளர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முன்வருவதாகவும் கூறினர்.
இறுதியில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சேவை செய்யும் அறநெறி ஆசிரியர்கள் நூற்றிற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்து இளைஞர் மன்றத்தின் நிதியினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

Post a Comment
Post a Comment