மத்ரஸா மாணவர்களுக்கு குர்ஆன் வழங்கும் நிகழ்வு



 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் மத்ரஸா மாணவர்களுக்கு குர்ஆன் வழங்கும் நிகழ்வு 2026 மார்ச் 14ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது கமு/கமு/ரியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் ஐ. ஜஃபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 50க்கும் மேற்பட்ட மத்ரஸா மாணவர்களுக்கு புனித குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிதியாக புனித குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்க அனுசரணை வழங்கிய றிஷாட் ஹெல்பிங் பவுண்டேஷன் தலைவரும், பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் கிழக்கு மாகாண செயற்திட்ட பணிப்பாளருமான எம்.பி முபாரக் கலந்து கொண்டார். மேலும், கிழக்கு மாகாண கவியுவன் கலை இலக்கிய மன்றத்தின் தலைவரும், கிழக்கு மாகாண பிரதேச சமூக அபிவிருத்தி பேரவையின் தலைவருமான ஏ.ஜி. இக்பால் அவர்களும், அல்- மீஸான் பவுண்டேஷன் தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினருமான யூ.எல்.என்.ஹுதா உமர் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

அத்துடன் அமைப்பின் செயலாளர், பொருளாளர், அமைப்பாளர், கணக்காய்வாளர், செயற்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை அறிவிப்பாளர் கவிஞர் சியான் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வு மூலம் மத்ரஸா மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் குர்ஆன் வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.