சமூக உற்பத்திதிறன் மாதிரிக்கிராம அங்குரார்ப்பண நிகழ்வு



 

ஆலையடிவேம்பு நிருபர்

வி.சுகிர்தகுமார்      


கிளின் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய தேசத்தை கட்டி எழுப்பும் வளமான கிராமம் சமூக உற்பத்திதிறன் மாதிரிக்கிராம அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (16) ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட அக்கரைப்பற்று 7ஆம் பிரிவில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாசா பிரதேச ஒருங்கிணைப்புக் குழத்தலைவரின் பிரதிநிதியும் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசன் பிரதேச சபை உறுப்பினரும் பிரஜா சக்தி தலைவருமான எம்.தங்கேஸ்வரன் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் நேசராஜா உள்ளிட்ட கிராமத்தின் முக்கியஸ்தர்கள்  பலர் கலந்து கொண்டனர்.
உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான முர்தாளா மற்றும் முஹம்மத் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கிளின் சிறிலங்கா தொடர்பான கீதமும் விசேட காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அக்கரைப்பற்று ஆம் பிரிவின் திட்ட அறிக்கை தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசனிடம் கையளிக்கப்பட்டது.
இதன் பின்னராக அதிதிகள் அனைவரும் இணைந்து மாதிரிக்கிராமத்தின் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்;டது.