காணி உரிமம் வழங்கி வைப்பு!




 ( வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்கள்  நேற்று (07) சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு தனது கன்னி விஜயத்தை மேற்கொண்டார். 

இவ் விஜயத்தின் முக்கிய அம்சமாக, நீண்டகாலமாக காணி உரிமைக்காகக் காத்திருந்த சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 50 பயனாளிகளுக்கு காணி அனுமதிப் பத்திரங்களை அரசாங்க அதிபர் வழங்கி வைத்தார்.

 அத்துடன் சமூக நலன்புரித் திட்டங்களின் கீழ், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவுகளும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வித் தரத்தை ஊக்குவிக்கும் வகையிலான விசேட கல்விப் உதவிக்கான காசோலைகளும் இதன்போது கையளிக்கப்பட்டன. 

மாவட்ட அரசாங்க அதிபராகப் பதவியேற்றதன் பின்னர் சம்மாந்துறைப் பகுதிக்கு அவர் மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும்.