அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டம்




 வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை பதவி விலக்குமாறு கோரிய ஆர்ப்பாட்டமொன்று பாராளுமன்ற நுழைவு பகுதியான பொல்துவ சந்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


ஓன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இந்த போராட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.


இந்த போராட்டம் காரணமாக பாராளுமன்ற நுழைவு பகுதியான பொல்துவ சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.