அக்கரைப்பற்றின் பெண் ஆளுமைகளில் ஒருவரும் சிறந்த முன்மாதிரியான பெண் அதிபர்களில் ஒருவருமான #_Mrs_Faishana_Harudeen அவர்களின் பிரியாவிடை நிகழ்வு பாடசாலை சமூகத்தின் பங்களிப்புடன் கல்லூரி மண்டபத்தில் மிகவும் 2026.4.12 அன்று அக்கரைப்பற்றில் அரங்கேறியுள்ளது.
அக்கரைப்பற்று ஆயிசா மகளிர் கல்லுாரி சில முதற்தரம் வாய்ந்த அதிபர்களைக் கண்டுள்ளது. ஆயினும் பெண் அதிபராக கடமையே்ற்று அக்கரைப்பற்று ஆயிசா மகளிர் கல்லுாரியின் கீர்த்தியினைச் சீர்த்தி பெறச் செய்தவர் இவர்.
“மனிதர்கள் வயதாகிவிடுவதால் விளையாடுவதை நிறுத்திக்கொள்வதில்லை. அவர்கள் விளையாடுவதை நிறுத்திக்கொள்வதால்தான் வயதாகிறது,” என்றார் பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்கக் கவிஞர் ஒலிவர் வெண்டல் ஹோம்ஸ். விளையாட்டு என்று அவர் சொன்னது விளையாட்டு மட்டுமாகாது, படைப்பு, வாசிப்பு, உழைப்பு என்று பன்முக ஈடுபாடாக விரிவுபடுத்திப் புரிந்துகொள்ளலாம்.
மிகப் பலரும் கிடைக்க வேண்டும் விரும்புகிற, கிடைத்தபின் இனி என்ன செய்வது என்று அலுத்துக்கொள்கிற ஒன்று இருக்கிறது. ஏதோ வேதாந்தமாகப் பேசுவது போல் இருக்கிறதா? வேறொன்றுமில்லை, அதுதான் ஓய்வு!
அன்றாட வேலைகளிலிருந்து சிறு பொழுது ஓய்வை உடலும் உள்ளமும் நாடுவது இயல்பு. அலுவலகத்தில் அல்லது தொழிலகத்தில் பல ஆண்டுகள் வேலை செய்த பின், சட்டப்படியே விடைகொடுத்து அனுப்பப்படுகிற பணி ஓய்வு வேறு வகை. சொந்தத் தொழில் மேற்கொள்வோரும் கூட, நெடுங்கால ஈடுபாட்டைத் தொடர்ந்து வயது முதிர்ந்த காலத்தில், பொறுப்புகளை வாரிசுகளிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வாய் இருக்கத் திட்டமிடுகிறார்கள். பணி ஓய்வுக்காலத்திற்கென்றே காப்பீட்டு நிறுவனங்கள் தனித் திட்டங்கள் வைத்துள்ளன.
இந்த ஏற்பாடுகள் இருந்தும் பலர் ஓய்வுக்காலத்தில் ஒரு மனச்சோர்வுக்கு உள்ளாகிறார்கள். தன்னைத் தானே சார்ந்திருக்கக்கூடிய வகையில் ஒரு வருவாய் வழி இருப்பவர்கள் மட்டுமல்லா மல், போதிய பொருளாதாரப் பின்புலம் உள்ளவர்களும் கூட அந்தச் சோர்வைச் சந்திக்கிறார்கள்.
ஓய்வு என்பது ஓய்ந்து கிடப்பதல்ல, ஓய்வு நிலை Faishana_Harudeen அதிபரே! உங்களுக்கான களப் பணிகளும், சமூகஞ்சார் கல்விப் பணிகளும் நிறைந்து கிடக்கின்றன.
உங்களது ஆற்றல், அறிவு அனுபவம். ஆளுமை போன்றவற்வை இனி வருங்காலங்களிலும் அக்கரைப்பற்று மண் பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை கீற்றுக்கள் என்னுள் தென்படுகின்றது.
அயராது உழைத்து ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபரின் எதிர்காலம் சிறக்கbஎனது_வாழ்த்துகளும்_பிரார்த்தனைகளும்.
இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்


Post a Comment
Post a Comment