நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி - முதலமைச்சர் விஜய் அரசுக்கு 144 பேர் ஆதரவு



தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

அதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த நிலையில் அனைத்து கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்மானத்தின் மீது பேசினர்.

இதன் பின்னர் டிவிஷன் பெஞ்ச் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் அரசுக்கு ஆதரவாக 144 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். திமுக வெளிநடப்பு செய்து விட்ட நிலையில், அவையில் இருந்தவர்களில் 22 பேர் எதிராக வாக்களித்தனர். 5 பேர் வாக்களிப்பிலிருந்து விலகுவதாகக் கூறினர்