மட்டக்களப்பில் நடைபெற்ற பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்ட விழிப்புணர்வு நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமூக அபிவிருத்திச் சபைகளை வலுப்படுத்துதல் மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்படமாட்டாது என்றும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment