மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் டுரிஜிலோ நகரிலுள்ள தோட்டமொன்றில் நேற்று (21) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தோட்ட தொழிலாளர்கள் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் அந்நாட்டமின் கொர்டஸ் மாகாணம் ஒமியா நகரில் பொலிஸ் வாகனமொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் ஹோண்டுராசில் நேற்று ஒரேநாளில் துப்பாக்கிச் சூட்டினால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Post a Comment
Post a Comment