நாட்டின் 16 பிரதான மற்றும் 10 நடுத்தர நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தின் இராஜாங்கனை நீர்த்தேக்கம், பதுளை மாவட்டத்தின் சொரபொர நீர்த்தேக்கம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரவில, லுணுகம்வெஹெர, வெஹெரகல நீர்த்தேக்கங்கள், குருநாகல் மாவட்டத்தின் மாகல்ல, தெதுறு ஓயா நீர்த்தேக்கம் மற்றும் கண்டி மாவட்டத்தின் வாமெடில்ல, நாலந்த நீர்த்தேக்கங்களும் மொனராகலை மாவட்டத்தின் அலிகொட்டஆர நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளது.
அத்துடன், கலா ஓயா வடிநிலப் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, அந்த வடிநிலத்தில் அமைந்துள்ள இராஜாங்கனை, தேவஹுவ, வெமெடில்ல ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடும் மழை காரணமாக இராஜாங்கனை, லுணுகம்வெஹெர, வெஹெரகல உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Post a Comment
Post a Comment