போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய பட்டுவத்தே சாமர எனப்படும் சந்தேக நபரை 72 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை அரச புலனாய்வுச் சேவை மற்றும் அஸர்பைஜான் நாட்டு பாதுகாப்புச் சேவை இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு நடவடிக்கையின் மூலம் இந்த சந்தேக நபர் அஸர்பைஜானில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவினர் கடந்த 2026.05.10 அன்று அவரை இலங்கைக்கு அழைத்து வந்தனர்.
தற்போது மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment