ஆலையடிவேம்பு நிருபர்
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு மூலம் 83 வீடுகள் நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைவாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான 83 வீடுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தலா 20 இலட்சம் ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதற்கமைவாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான முதற்கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் உள்;ளிட்ட அரச உயர் அதிகாரிகள் சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வீடமைப்பதற்கான முதற்கட்ட காசோலைகள் பயாளிகளிடம் பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
காசோலையினை பெற்றுக்கொண்ட மக்கள் அரசுக்கும் அமைச்சுக்கும் பிரதேச செயலாளர் உள்;ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதேநேரம் பிரதேச செயலாளர் உரையாற்றுகையில் வரலாற்றில் முதற்தடவையாக அதிகளவான வீடுகள் ஒரே நேரத்தில் அமைவதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்ட அரசுக்கு நன்றி கூறினார். அதிலும் அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு அதிக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் எனவும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment
Post a Comment