ஐந்து வருடங்களுக்கும் அதிக காலமாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படமால் இருந்த பதவியுயர்வுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் நட்த்தப்பட்ட விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் மனிதவள பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் 10,000 புதிய உத்தியோகத்தர்களை இணைக்கும் நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment