மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ தினமான இன்று (17) காலை 6.30 மணியளவில் வழமைப் போல் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர் ஒருவரின் வலையில் சடலம் ஒன்று சிக்கியதையடுத்து, அதனை மீனவர் கரைக்கு இழுத்து வந்துள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் மதுபோதையில் வாவியில் நீராடிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார் என பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு ஒப்படைக்க நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment