அமெரிக்க உளவுத்துறை பணிப்பாளர் துளசி இராஜிநாமா




 அமெரிக்க உளவுத்துறை பணிப்பாளர் துளசி கபார்ட் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.


இதுதொடர்பில் அவரது, இராஜிநாமா கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, 


தனது கணவர் ஆபிரகாம் எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 


எனவே அவர் எதிர்கொள்ளவிருக்கும் பெரும் சவால்கள் காரணமாக எதிர்வரும் நாட்களில் அவருக்கு உதவியாக இருக்க விரும்புகிறேன். 


இதன் காரணமாக பொதுச் சேவையிலிருந்து விலகு தீர்மானித்துள்ளேன். 


தன் மீது நம்பிக்கை வைத்தமைக்கு ஜனாதிபதி ட்ரம்புக்கும் அவரது குடும்பத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


கடினமான சூழ்நிலையில் எங்கள் குடும்பத்தின் மீது அக்கறை காட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


நமது தேசத்துக்கு சேவை செய்யும் பெரும் கௌரவத் அளித்த உங்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.