பதவி வெற்றிடம், நீட்டிக்கப்பட்டுள்ளது



 


🛑2026.03.27 ஆம் திகதிஅரசாங்க வர்த்தமானி இலக்கம் 2482 இன் படி, இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கும் பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது.


விண்ணப்பங்கள் நிகழ்நிலை (Online) முறையில் மட்டுமே கோரப்பட்டிருந்தன. விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி திகதி 2026.05.08 ஆக இருந்தது. ஆனால் 2026.05.15 ஆம் திகதிய அரசாங்க வர்த்தமானி இலக்கம் 2489 இன் படி, அது 2026.06.01 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஏதேனும் கேள்விகள் ஏற்பட்டால், விண்ணப்பதாரர்கள் பொலிஸ் ஆட்சேர்ப்பு பிரிவிலுள்ள பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் மூலம் தகவல்களைப் பெறலாம்.

தொலைபேசி இலக்கங்கள்:


நிலையப் பொறுப்பதிகாரி / பொலிஸ் ஆட்சேர்ப்பு பிரிவு:

071 - 8591925

011 - 2505202

011 - 2552953


பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் விசேட அதிரடிப் படை பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி நிலை  


அடிப்படைத் தகுதிகள்


விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று வயது 18 முதல் 24 வரை இருக்க வேண்டும்ග


கல்வித் தகைமைகள்


கல்விப் பொது தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், சிங்களம்/தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய பாடங்கள் ஐந்து (05)  திறமைச் சித்தியுடன், பாடங்கள் ஆறு (06) இல் அதிகபட்சம் இரு தடவைகளில் சித்தியடைந்திருக்க வேண்டும்.


அல்லது


கல்விப் பொது தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் கணிதம் மற்றும் சிங்களம் அல்லது தமிழ் மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய பாடங்கள் ஐந்து (05) இல் திறமைச் சித்தியுடன், பாடங்கள் ஆறு (06) இல் அதிகபட்சம் இரு தடவைகளில் சித்தியடைந்திருக்க வேண்டும் மற்றும் கல்விப் பொது தராதர (உயர்தரம்) பரீட்சையில் ஒரே தடவையில் இரண்டு (02) பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.


உடற்தகுதிகள்


உயரம் குறைந்தது 05 அடி 04 அங்குலம் (162.56 செ.மீ) அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

மார்பளவு குறைந்தது 30 அங்குலம் (76.2 செ.மீ) இருக்க வேண்டும் (மூச்சை வெளிவிடும் போது).


திருமணம் ஆகாதவராக இருத்தல் வேண்டும்.


---------------


பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி மற்றும் விசேட அதிரடிப் படை பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி பதவி நிலைக்கு

  

அடிப்படைத் தகைமைகள்


விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று வயது 18 முதல் 28 வரை இருத்தல் வேண்டும்.


கல்வித் தகைமைகள்


கல்விப் பொது தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் கணிதம் மற்றும் தாய் மொழி (சிங்களம்/தமிழ்) ஆகியவற்றை உள்ளடக்கியதாக, இரு தடவைகளுக்கு மேற்படாது குறைந்தது இரண்டு (02) திறமைச் சித்திகளுடன், ஆறு (06) பாடங்களில்  சித்தியடைந்திருத்தல் வேண்டும்.


உடற்தகுதிகள்


உயரம் குறைந்தது 05 அடி 02 அங்குலம் (157.48 செ.மீ) அல்லது அதற்கு மேல் இருத்தல் வேண்டும்.


மார்பளவு குறைந்தது 30 அங்குலம் (76 செ.மீ) இருக்க வேண்டும் (மூச்சை வெளிவிடும் போது).

திருமணம் ஆகாதவராக இருத்தல் வேண்டும்.


தொழிற் தகைமைகள் 


சிறிய மோட்டார் வாகனங்கள் அல்லது கனரக வாகனங்களை செலுத்துவதற்கு செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருத்தல் வேண்டும்.

----------------

 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி நிலை. 


அடிப்படைத் தகைமைகள்


விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று விண்ணப்பதாரி வயது 18 முதல் 24 வரை இருக்க வேண்டும்.


கல்வித் தகைமைகள்


கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், சிங்களம்/தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய பாடங்கள் ஐந்து (05) இல் திறமைச் சித்தியுடன், பாடங்கள் ஆறு (06) இல் அதிகபட்சம் இரு தடவைகளில் சித்தியடைந்திருக்க வேண்டும்.


அல்லது


கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் கணிதம் மற்றும் சிங்களம் அல்லது தமிழ் மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய பாடங்கள் ஐந்து (05) இல் திறமைச் சித்தியுடன், பாடங்கள் ஆறு (06) இல் அதிகபட்சம் இரு தடவைகளில் சித்தியடைந்திருக்க வேண்டும் மற்றும் கல்விப் பொது தராதர (உயர்தரம்) பரீட்சையில் ஒரே தடவையில் இரண்டு (02) பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.


• உடற்தகுதிகள்


உயரம் குறைந்தது 05 அடி 01 அங்குலம் (154.94 செ.மீ) அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.


• திருமணமாகாதவராக இருக்க வேண்டும்.


இலங்கை பொலிஸ் பொலிஸ் விசேட அதிரடிப்படையும் கொண்டுள்ள பெருமையை முன்னெடுத்து, சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்து, நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் ஆற்றல் மற்றும் துணிச்சலை அர்ப்பணிக்க தயாராக உள்ள ஒழுக்கமுள்ள, செயற்பாட்டுத் திறன் கொண்ட இளைஞர்கள் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்.


:-இலங்கை பொலிஸ் திணைக்களம்.


22.05.2026