வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்தியசாலைக் குழுவின் ஏற்பாட்டில்,புதிதாக வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளராக கடமையேற்ற மருத்துவர் பொன்னுச்சாமி ஸ்ரீ சங்கர் மற்றும் மகத்தான சீரிய சேவையாற்றிவரும் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் மற்றும் சிரேஷ்ட வைத்திய அதிகாரி மருத்துவர் சாமித்தம்பி ராஜேந்திரா ஆகியோருக்கு வரவேற்பு விழாவும் கௌரவிப்பு விழாவும் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு வைத்தியசாலை குழுத் தவிசாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சந்திரசேகரன் ராஜன் தலைமையில் இன்று (22) வெள்ளிக்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் விமரிசையாக நடைபெற்றது .
முன்னதாக மறைந்த முன்னாள் வைத்திய அத்தியட்சகர் மருத்துவர் லங்கா ஜெயசிங்கவிற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாராட்டுக்கள் பெறும் மூன்று மருத்துவர்கள் தொடர்பான விசேட பாராட்டு உரையை,
வைத்தியசாலைக் குழுவின் பிரதித் தவிசாளரும், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார் .
.jpg)

Post a Comment
Post a Comment