வி.சுகிர்தகுமார்
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கமைவாக நாடு முழுவதுமுள்ள கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இன்று (23) முன்னெடுக்கப்பட்டது.
'சுத்தமான கடற்கரைகளை கவர்ச்சிகரமான சுற்றுலா தளங்களாக மாற்றுவோம்' எனும் தொனிப்பொருளில்;' இடம்பெற்ற கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டத்தில் பலர் இணைந்து கொண்டனர்.
இதற்கமைவாக அக்கரைப்பற்று இராணுவ முகாமின் 241 ஆம் காலாட்படைப்பிரிவின் ஏற்பாட்டில் நீத்தை முகாம் பதில் பொறுப்பதிகாரி ராஜகுரு மேற்பார்வையில் சின்னமுகத்துவாரம் கடற்கரை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுத்தம் செய்யும் பணியில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாசா மற்றும் சமூக ஆர்வலர் சஜீவ் பிரதேச செயலக சுற்றச்சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.எல்.மக்மூதா மற்றும் எஸ்.ஜனனி கிராம உத்தியோகத்தர் பொருhளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது கடற்கரை பிரதேசத்தில் காணப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் சிரட்டைகள் பொலித்தின் பைகள் குப்பைகள் என மீட்கப்பட்ட கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டு பிரதேச சபை உழவு இயந்திரங்களின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டது.

Post a Comment
Post a Comment