வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடு



 


வி.சுகிர்தகுமார்       




டித்வா புயல் அனர்த்தம் காரணமாக வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட வியாபார நிலையங்கள் மற்றும் சிறுகைத்தொழில் உற்பத்தி நிலையங்களுக்கான நட்ட ஈடு வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்  (22) நடைபெற்றது.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் மற்றும் அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் வசந்தன் சிறுகைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நிம்சாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது பதிவு செய்யப்பட்ட வியாபார நிலையமொன்றிற்கு 2 இலட்சம் இழப்பீடும் பதிவு செய்யப்படாத வியாபார நிலையங்கள் மற்றும் சிறுகைத்தொழில் உற்பத்தி நிலையங்களுக்கு 50 ஆயிரம் ரூபா வீதம் நட்டஈடு வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட 8 விற்பனை நிலைய உரிமையாளர்கள் இன்று நட்டஈட்டு நிதியினை பெற்றுக்கொண்டனர்.
நிதியினை பெற்றுக்கொண்ட வியாபார நிலைய உரிமையாளர் சுவர்ணராஜ் நட்ட ஈட்டினை துரிதமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும்  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் நன்றி கூறினார்.
மேலும் நாட்டை சிறப்பாக முன்னெடுக்கும் ஜனாதிபதி அவர்களுக்கு எதிர்காலத்திலும் தங்களது ஒத்துழைப்பை வழங்கு உறுதி பூணுவதாகவும் குறிப்பிட்டார்.