( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக(DD) கடந்த வாரம் நியமிக்கப்பட்ட மருத்துவர் பொன்னுச்சாமி ஶ்ரீசங்கர் நேற்று, டிஜிட்டல் முறையிலான வெளிநோயாளர் பிரிவின் செயற்பாடுகளை அவதானிக்க கள விஜயத்தை மேற்கொண்டார்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பட்டதாரியான இவர் தற்போது மருத்துவ நிர்வாக முதுமானி பட்டத்தை (MBBS,MSc.Medi.Admin). பெற்றதன் காரணமாக பிரதிப் பணிப்பாளர் பதவி உயர்வு கிடைத்தது.
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அவர் நேற்று வருகைதந்த அவர் வெளிநோயாளர்களுடனும், வைத்தியசாலை ஊழியர்களுடனும் கலந்துரையாடினார்.
டிஜிட்டல் வெளி நோயாளி பிரிவு பொறுப்பதிகாரி மருத்துவர் கே. ஞானரத்தினத்துடனும் கலந்துரையாடினார்.
.jpg)

Post a Comment
Post a Comment