வைத்திய அத்தியட்சகர் திருமதி குணாளினி சிவராஜ் ( M.S) அவர்களுக்கு வாழ்த்துக்கள்



 


வாழ்த்துக்கள் வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ்.

ஆலையடி வேம்பு/அக்கரைப்பற்று  டாக்டர் குணாளினி  சிவராஜ்  மகோயா ஆதார  வைத்தியசாலையின்  வைத்திய அத்தியட்சகராக(MS)  சுகாதார அமைச்சினால்   நியமிக்கப்பட்டுள்ளார்.


திருநாவுக்கரசு வித்தியாலயம் ஆலையடிவேம்பு , அக்கரைப்பற்று ஆர்.கே.எம்  தேசியபாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவியாகிய இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் MBBS பட்டம்  பெற்றவராவார்.


முதலாவது தடவையிலையே  மருத்துவ பீடம் தெரிவான இவர்  2005 அதி உச்ச யுத்த காலம் என்பதால் இவரின் கல்வித்திசையை மாற்றி வங்கி உத்தியோகத்தராக  செல் எனும் பெற்றோரின்  பாதுகாப்பு இலக்கை உடைத்தெறிந்து  மருத்துவ பீடம் சென்று  இன்று DR .குணாளினி  (MBBS,MSc.Medi.Admin).


முன்னாள் வங்கி உத்தியோகத்தர் தங்கவடிவேல், ஆசிரியை சோதிமலர் தம்பதியரின் ஏக  புத்திரியான இவர் அம்பாறை,அட்டாளைச்சேனை,அக்ரைப்பற்று,ஒலுவில்,பனங்காடு வைத்தியசாலைகளில் கடமை புரிந்துள்ளார்.


இறுதியாக  பனங்காட்டில் கடமைபுரிந்து  வைத்தியசாலையின் திரும்பல்புள்ளி  டாக்டர் குணாளினி என்ற நாமத்தை பெற்றுள்ளார்.


கணவர் பொறியியலாளர்.தற்போது  தேசிய நீர்வழங்கல்  வடிகாலமைப்பு  சபையின் அம்பாறை  மாவட்ட   முகாமையாளர்.


மிகவும் கெட்டிக்காரி,அன்பின் உச்சம்,நட்பின் சிகரம், கடமையுணர்வு, வெட்டு ஒன்று  துண்டு இரண்டு ,கிராம பண்பாட்டு பாரம்பரிய கலாச்சாரம்  பேணலின்  ஆளுமை போன்றவற்றை தன்னகத்தே கெண்ட "தங்கசோதிகுணாளினிசிவராஜ்"மகோயாவில் பெயர் எடுப்பார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.


தகவல்

ரவீந்திரன்