அக்கரைப்பற்றில் மோட்டார் சைக்கிளினால், ஒருவருக்கு கடுங்காயமேற்படுத்தியவர், சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்




கடந்த வெள்ளிக்கிழமையன்று, அக்கரைப்பற்றில் சாரதி அனுமதிப் பத்தரமில்லாமல் மோட்டார் வாகனத்தினைச் செலுத்தி, ஒருவர் மீது மோதி கடுங்காயமேற்படுத்திய பாடசாலை மாணவர் ஒருவரை, அடுத்த மாதம்  2ந்திகதி வரை  சிறுவர் காப்பத்தில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் அபிநயா சூரியசிவா இன்று கட்டளை பிறப்பித்தார். 

கல்லுாரி மாணவரான இவர் செலுத்திய வாகனம் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில், மோட்டார்  சைக்கிளில் வந்த இன்னுமொருவர் மீது மோதியது.

குறித்த விபத்தில் கடுங்காயமுற்ற ஓய்வு நிலை வங்கியாளர், காரி என்பர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உணர் திறனற்றுக் காணப்படுகின்றார்.