( எம்.என்.எம்.அப்ராஸ்)
உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் விழிப்புணர்வு நடைபவனி மற்றும் கருத்தரங்கு மாவட்ட கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையால் இன்று (03/06/2026) இடம் பெற்றது.
இதன் போது பாடசாலை அதிபர் எம்.எம்.ஹிர்பகான், பிரதி அதிபர்களான எம்.எஸ்.நபார்,எம்.ஏ.எம்.சிறாஜ் , உதவி அதிபர் ஏ.எம்.பாஹிம், கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் கே.சிவக்குமார், ஆசிரியர்கள் மாணவர்கள்,கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சர்வதேச உலக சமுத்திர திமானது ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 08 திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. உலக சமுத்திர தினம்,உலக சுற்றாடல் தினத்தை சிறப்பிக்கும் முகமாக சுற்றாடல் அமைச்சானது ஜுன் மாதம் 01தொடக்கம் 08ம் திகதி வரையான காலப்பகுதியை தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுதியுள்ளது இதனடிப்படையில் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையானது மாணவர்கள் ,பொதுமக்கள், ஏனைய அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் கடல் சூழல் மாசடைதல், இதன் பாதிப்புகள், தற்காலத்தில் கடல் சூழலை பாதுகாப்பதன் அவசியம் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment