நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகப் பணியாற்றி வந்த ஏ.ரி.எம். றாபி அவர்கள் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனக் கடிதம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களினால் இன்று (15) வழங்கி வைக்கப்பட்டது.
உள்ளூராட்சி நிர்வாகத் துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட அதிகாரியான ஏ.ரி.எம். றாபி அவர்கள் பல்வேறு உள்ளூராட்சி நிறுவனங்களில் பொறுப்பான பதவிகளை வகித்து திறமையான நிர்வாகியாகத் திகழ்ந்து வந்துள்ளார். அண்மைக் காலமாக கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகச் செயல்பட்டு, மாநகர சபையின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார்.
அவரது சேவைகள் மற்றும் நிர்வாகத் திறமைகளை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பதவிக்கான இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நியமனத்தின் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாக நடவடிக்கைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்கள் சேவைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள ஏ.ரி.எம். றாபி அவர்களுக்கு அரசியல், நிர்வாக மற்றும் சமூக மட்டங்களில் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

.jpg)

Post a Comment
Post a Comment