அபுதாபியில் வாடகை உயர்வுக்கு தற்காலிக தடை




 அபுதாபி​யில் குடி​யிருப்​பு​கள், வணிக மற்​றும் தொழில்​துறை சார்ந்த சொத்துகளுக்​கான வாடகை உயர்வை அடுத்த அறி​விப்பு வரும் வரை அரசு முடக்கி வைத்​துள்​ளது.


இதன்​படி வீட்டு உரிமை​யாளர்​கள் தற்​போதுள்ள வாடகைதாரர்களுக்கு வாடகையை உயர்த்​தவோ அல்​லது இதற்கு முன்பு வாடகைக்கு விடப்​பட்ட சொத்துகளில் குடியேறும் புதிய வாடகை​தா​ரர்​களிடம் அதிக கட்​ட​ணம் வசூலிக்கவோ அனுமதிக்கப்பட மாட்​டார்​கள்.


அபு​தாபி​யின் ரியல் எஸ்​டேட் ஒழுங்​கு​முறை அமைப்​பான அபுதாபி ரியல் எஸ்டேட் மையம் இந்த முடிவை அறி​வித்​துள்​ளது. மேலும் இது உடனடி​யாக அமுலுக்கு வருவ​தாக தெரிவிக்கப்பட்டுள்​ளது. 


ஈரான் - அமெரிக்க போர் காரண​மாக அதி​கரித்து வரும் செல​வு​களைச் சமாளிக்க பல குடும்​பங்​களும் வணி​கர்​களும் போராடி வரும் வேளை​யில் இந்த மாற்​றம் உடனடி நிதிப் பாது​காப்பை வழங்​கு​கின்றது.


ஐக்​கிய அரபு அமீரகத்​தில் வசிக்​கும் புலம்​பெயர்ந்த குடும்பங்களுக்கு மாதத்​தின் மிகப்​பெரிய செல​வாக பெரும்பாலும் வாடகையே இருக்​கின்றது. அந்​நாட்​டின் மிகப்​பெரிய வெளி​நாட்​டுச் சமூகங்​களில் ஒன்​றாக விளங்​கும் இந்தியர்களுக்கு, இந்த வாடகை முடக்​கம் கணிச​மான சேமிப்பாக மாறும். இது அபு​தாபி​யில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்​தி​யக்​ குடும்​பங்​களுக்​கு நிம்​ம​தி​யை அளித்துள்ளது.