பொசன் தினத்தை முன்னிட்டு



 


போயா பொசன் தினத்தை முன்னிட்டு மூதூர் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கடலை அன்னதானம் இன்று (29) திங்கட்கிழமை காலை மூதூர் -திரிசீடி சந்தியில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது வீதியால் வாகனங்களில் பயணித்தோர் இடை நிறுத்தப்பட்டு அவர்களுக்கு கடலை அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.


மூதூர், தோப்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள்,தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச இணைப்பாளர் ,கிளீன் சிறிலங்கா இணைப்பாளர் ,பொலிஸார், பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து இவ் கடலை அன்னதானத்தை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.    


 #poyadansal #poyaday🙏 #Trincomalee