ஆலையடிவேம்பு நிருபர்வி.சுகிர்தகுமார்
கதிர்காம முதல் நாள் பாதயாத்திரையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையில் இணைந்து கொள்ள உகந்தை முருகன் ஆலயத்தில் தங்கியிருப்பதை காண முடிகின்றது.
இந்நிலையில் நாளில் அதிகூடிய பக்தர்கள் காட்டுவழிப்பாதை பாதயாத்திரையில் இணைந்து கொண்டமை இதுவே முதல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
காட்டுவழிப்பாதை திறப்பு நிகழ்வில்
அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள இரட்ணாயக்க மற்றும் பிரியந்த விஜயரெத்தின மாவட்ட உதவி அரசாங்க அதிபர சி.ஜெகராஜன் லாகுகல பிரதேச செயலாளர் நவனீதராஜா உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களும் கலந்து கொண்டனர்.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீPP க.கு.சீதாராம குருக்கள் நடாத்தி வைத்ததன் பிற்பாடு காட்டுவழிப்பாதை திறப்பு கழகு மலை பத்துப்பாடி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
10 ஆம் திகதி காட்டுவழிப்பாதை திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜுலை 24 ஆம் திகதி மூடப்படுகின்றது.
இதேநேரம் இவ்வருடம் சுமார் 50000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொலித்தீன் பாவனை மற்றும் சிறிய தண்ணீர்போத்தல்களை கொண்டு செல்வதை தடை செய்துள்ள நிலையில் பல இறுக்கமான உத்தரவுகளும் பாதயாத்திரிகர்கள் கடைப்பிடிக்க கருத்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுவர் தொடக்கம் முதியவர்கள் வரை ஆண்;கள் பெண்கள் என அனைவரும் கலாசார ஆடையுடன் மாத்திரம் யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment