மாத்தறையில் பேருந்து விபத்து: 18 பேர் படுகாயம்



 


மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் 18 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 7 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து, வீரவில பிரதேச செயலகத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


விபத்தில் காயமடைந்தவர்கள் தெபரவெவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் படுகாயமடைந்த நால்வர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பில் வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.