புளியம்பொக்கனை பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
, A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆவது கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள 40 மீற்றர் நீளமுடைய புளியம்பொக்கனை பாலம், இன்று (28.07.2026) உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாலத்தின் புனரமைப்புப் பணிகள், கொரோனா பெருந்தொற்று மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 206 மில்லியன் செலவில் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
வீதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் பாலம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்பாளர் மருங்கன் மோகன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், கண்டாவளை பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
புளியம்பொக்கனை பாலத்தின் புனரமைப்பு நிறைவடைந்ததன் மூலம் பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கான பாதுகாப்பான, விரைவான மற்றும் சீரான போக்குவரத்து வசதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் இத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#AKD #bridge #Kilinochchi


Post a Comment
Post a Comment