கதிர்காம யாத்திரிகர்களின் நன்மை கருதி உகந்தைமலை ஆலயத்தில் சிரமதானப்பணி



 


வி.சுகிர்தகுமார்         

இடம்பெற்ற சிரமதானப்பணிகளை மாவட்டத்தில் உள்ள பல்வேறு திணைக்களங்களும் நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றன.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் (06) இப்பணி முன்னெடுக்கப்பட்டன.
இப்பணியில் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதியான முறையில் ஆலய வளாகத்தில் இருந்த பற்றைகள், குப்பைகள் அகற்றப்பட்டதுடன் நீராடுவதற்கு பயன்படுத்தும் கிணற்றை அண்டிய பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டன.
கதிர்காம கந்தனை தரிசிக்கும் அடியவர்கள் பாதயாத்திரையாக நாட்டின் பல பாகங்களிலுமிருந்து உகந்தை மலை முருகன் ஆலயத்தை சென்றடைந்து கொண்டிருக்கும் இந்நாட்களில் நடைபெற்ற இச்சிரமதானப்பணியினால் பக்தர்கள் நன்மையடைந்துள்ளனர்.
இதேவேளை பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை இம்மாதம் 10ஆம் திகதி திறக்கப்பட்டதுடன் எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி மூடப்படுகின்றது.
இந்நிலையில் காட்டுவழிப்பாதை நாட்களை அதிகரித்து தருமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.